நகைக் கடை பெண் ஊழியர் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் நகைக்கடை பெண் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-05-12 11:49 GMT
தற்கொலை 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் பகுதியை  சேர்ந்தவர் கிருஷ்ணன் மகள் செல்வி (22) இவர் பிஏ பட்டதாரி. தற்போது மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரு நகை கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக செல்வி மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் தனது தாயாருடன் சரிவர பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில் செல்வி வீட்டில் உள்ள தனது அறையில் உள்ள மின்விசிறியில் சேலையால்  தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த  செல்வியின் தாயார் கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இன்ஸ்பெக்டர் பால முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து நடத்தி பின்னர் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செல்வியின் தாயார் சந்திரா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து  விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News