நகை பட்டறை காவலாளி தூக்கிட்டு தற்கொலை

சேலத்தில் நகை பட்டறை காவலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-06 12:05 GMT

தற்கொலை 

சேலம், செவ்வாய்பேட்டை சின்ன எழுத்துக்கார தெருவைச் சேர்ந்தவர் சிங்கரசன் (56), சேலத்தில் உள்ள ஒரு நகைப்பட்டறையில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு கோவைக்கு செல்லும் தனது மகனை அனுப்பி வைப்பதற்காக புது பஸ் ஸ்டாண்ட் சென்றார்.

பின்னர் மதுகுடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதுகுறித்து அவரது மனைவி சசிகலா கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவரது அறைக்கு சென்ற சிங்கரசன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News