நெல்லை அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்பு
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு துவங்கியுள்ளது.;
Update: 2024-06-18 06:06 GMT
அரசு பேருந்துகள் (பைல் படம்)
திருநெல்வேலி மாவட்டத்தில் 169 அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் 290 நடத்துநர் பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு தொடங்கியுள்ளதாக போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களை தனியார் ஏஜென்சிகள் மூலம் நிரப்ப அரசு உத்தரவிட்டிருந்த நிலையில் ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.