டிஎம்பி வங்கியில் பணி: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-20 15:26 GMT

கோப்பு படம் 

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் தற்போது மேனேஜிங் டைரக்டர், தலைமைச் செயல் அதிகாரி (Managing Director and Chief Executive Officer) பணியிடங்கள் காலியாக அமைந்துள்ளன.

கல்வித் தகுதி: அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பட்டப்படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு (Graduate Degree அல்லது Post Graduate Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு: 31.03.2024 அன்றைய தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 45 வயது முதல் 62 வயதுக்குள் உள்ளவராக இருத்தல் வேண்டும். ஊதிய விவரம்: இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் TMB வங்கி விதிமுறைப்படி மாத ஊதியத்தை பெறுவார்கள். தேர்வு முறை: பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இணைய தளம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 05.05.2024 அன்று வரை இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/newregisterbase.do?id=MDC&post=MDC20242501 என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்த பணியிட விளம்பர அறிவிப்பு தொடர்பான விவரங்களைப் பெற https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_MDC20242501.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.

Tags:    

Similar News