ஜோசப் கல்லுாரியில் கலாசார போட்டி
திருநாவலுார் ஜோசப் கலை அறிவியல் கல்லுாரி, கமலா கல்வியியல் கல்லுாரிகளுக்கு இடையே கலாசார போட்டிகள் நடந்தது.
திருநாவலுார் ஜோசப் கலை அறிவியல் கல்லுாரி, கமலா கல்வியியல் கல்லுாரிகளுக்கு இடையே கலாசார போட்டிகள் நடந்தது. விழாவிற்கு, கல்லுாரி செயலாளர் பிரபாகர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். நடிகர்கள் வையாபுரி, கிங்காங், விஜய் கணேஷ், சத்யா, இசையமைப்பாளர் செல்வராஜ், பேராயர் மேஷக் ராஜா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில், கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு கலை- அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்களின் திறமைகளுக்கு ஏற்ப பரிசு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த சேம்பியன்ஷிப் பரிசை நெல்லிக்குப்பம் ஏ.எல்.சி., கல்வியியல் கல்லுாரி மாணவர்கள் தட்டிச் சென்றனர். விழாவில் கல்லுாரி தாளாளர் கமலா, செயலாளர் ஜோசப், முதல்வர் ஏஞ்சல் ஜாஸ்மின் ெஷர்லி, டீன் கதிர்வேலு, கவாஸ்வர், துணை முதல்வர் வள்ளல் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜோசப் ஜோஸ்வா கிப்சன் நன்றி கூறினார்.