அரசியல் கட்சி தொடங்கியதால் மகிழ்ச்சி: ரசிகர்கள் கொண்டாட்டம்

அரசியல் கட்சி தொடங்கியதால் நடிகர் விஜய் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-02-03 10:15 GMT

இனிப்புகள் வழங்கிய விஜய் ரசிகர்கள் 

நடிகர் விஜய். தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். இதற்கு வரவேற்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதேபோல் சேலம் பழைய பஸ் நிலையம் அருகில் நேற்று மதியம் சேலம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைவர் தமிழன் ஆ.பார்த்திபன் தலைமையில் ரசிகர்கள் ெகாண்டாடினர். அதாவது 5 ஆயிரம் பேருக்கு அன்னதானமும், 10 ஆயிரம் பேருக்கு இனிப்பும் வழங்கினர்.

தொடர்ந்து மாலையில் வணிக வளாகத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் சார்பில் 1,000 பேருக்கு வேட்டி சேலை, 5 ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம், 10 பேருக்கு தலா 2 கோழிகள், 10 பேருக்கு இலவச ஆடுகள் ஆகியன வழங்கப்பட்டன. பின்னர் பழைய பஸ் நிலையத்தில் அண்ணா, காந்தி சிலைக்கு கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலை, அரசு கல்லூரி அருகில் அம்பேத்கர் சிலை, 2-வது அக்ரஹாரத்தில் உள்ள காமராஜர் சிலை ஆகியவற்றுக்கு தமிழன் பார்த்திபன் தலைமையில் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்தனர்.

நிகழ்ச்சியில் ஆத்தூர், கெங்கவல்லி, ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி, மேட்டூர் உள்பட மாவட்டம் முழுவதும் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News