ஓணாங்குடியில் சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
அருமளம் அருகே ஓணாங்குடியில் சணல் பைகள் தயாரிக்கும் பயிற்சியில் மகளிர் சுய உதவி குழுவினர் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.;
Update: 2024-01-09 13:23 GMT
பயிற்சி
திருமயம் அருமளம் அருகே ஓணாங்குடியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் சார்பில் சணல் பைகள் தயாரிக்கும் பயிற்சி நடந்தது. ஊராட்சித் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். வட்டார மகளிர் திட்ட மேலாளர் வெள்ளையம்மாள் வரவேற்றார். மகளிர் திட்ட பண்ணை சாரா மண்டல உதவி திட்ட அலுவலர் ராஜா முகமது பயிற்சி தொடங்கி வைத்தார். பயிற்றுநர் ஆனந்தி தொழில் வழிகாட்டுதல் சணல் பொருட்கள் தயாரிக்கும் முறைகளை விளக்கினார். சுய உதவி குழு மகளிர் 50 பேர் பயிற்சி பெற்றனர். மகளிர் திட்ட ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தனலட்சுமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் வனிதா செய்திருந்தார்