தென்காசியில் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி: கடையநல்லூர் எம்எல்ஏ வாழ்த்து

தென்காசியை சேர்ந்த இன்பாவை கடையநல்லூர் எம்எல்ஏ வாழ்த்தினார்.

Update: 2024-04-21 15:26 GMT

இன்பாவை வாழ்த்திய எம்எல்ஏ

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள விஸ்வநாதபுரம் பகுதியை சேர்ந்த பீடித்தொழிலாளி மகள் இன்பா ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற மாணவியை தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லுார் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ண முரளி (எ) குட்டியப்பா இன்று நேரில் சென்று பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தென்காசி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் எஸ்ஆர். ராமச்சந்திரன், இணைச்செயலாளா் ஈஸ்வரி, பெரியபிள்ளைவலசை புதுகாலனி செயலாளா் வேம்பு(எ)ரவி மற்றும் கழக நிர்வாகிகள் பலா் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News