சிலம்பாட்ட கலைஞருக்கு கலை இளமணி விருது

சேலம் சங்கமம் விழாவில் சிலம்பாட்ட கலைஞர்,மாணவி தங்கம் தமிழினிக்கு தமிழக அரசின் கலை இளமணி விருதை மேயர் ராமச்சந்திரன் வழங்கினார்.

Update: 2024-02-29 07:24 GMT

 தங்கம் தமிழினிக்கு விருது

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை தினசரி மார்க்கெட்டில் பழக்கடை நடத்தி வரும் தங்கராஜ்- கராத்தே பயிற்சியாளர் அபிராமி தம்பதியின் மகள் தங்கம்.தமிழினி, இவர், மேட்டூர் எம்.ஏ.எம். பப்ளிக் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சிலம்ப கலையில் சாதித்து வரும் மாணவி தமிழினியை கவுரவிக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் கலை இளமணி விருது வழங்கப்பட்டுள்ளது.

சேலம் சங்கமம் விழாவில் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், அருள் எம்.எல்.ஏ. ஆகியோர் தமிழினிக்கு கலை இளமணி விருதை வழங்கினர். விருது பெற்றது குறித்து தமிழினி கூறுகையில், சிலம்ப கலையில் இதுவரை 37 விருதுகளை பெற்றுள்ள நான், 17 உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளேன். 300-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்றுள்ளேன். தமிழக அரசு சார்பில் முதல் முறையாக விருது பெற்றுள்ளது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அதற்காக தமிழ்நாடு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், கலை பண்பாட்டுத்துறை அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

Tags:    

Similar News