கலைஞர் நூற்றாண்டு விழா - பள்ளிபாளையத்தில் பொது மருத்துவ முகாம்

Update: 2023-11-26 02:16 GMT

மருத்துவ முகாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சி சார்பாக, கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடைபெற்ற  மருத்துவ முகாமை நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், ஆணையாளர் தாமரை, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் திவ்யா ஆகியோர்  துவக்கி வைத்தனர். முகாமில் பொது மருத்துவம், பெண்களுக்கான பொது மருத்துவம், கண் மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், பல் மருத்துவம்,சித்த மருத்துவம் மற்றும் மருத்துவ பரிசோதனையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் நகராட்சி அதிகாரிகள்,  நகர மன்ற உறுப்பினர்கள், வட்டார மருத்துவக் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News