கலைஞர் நூற்றாண்டு விழா : பள்ளியில் கலைப் போட்டி

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஆவரங்காடு பெண்கள் பள்ளியில் கலைத்திருவிழா போட்டிகள் நடந்தது.

Update: 2024-01-05 01:32 GMT

நாமக்கல் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அனைத்து வகை அரசு பள்ளிகள், உதவி பெறும் தனியார் உயர் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, மற்றும் ஓவியப்போட்டி ஆகியவை நடைபெற்று வரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கலை போட்டிகள் நடைபெற்றது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, வினாடி வினா, ஓவியப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் பங்கேற்றனர். நிகழ்விற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமை தாங்கினார். மேலும் நிகழ்வில் பங்கேற்ற மாணவிகள் கலைஞர் கருணாநிதி அவர்களின் உருவப்படங்களை வரைந்தும் ,அவர் குறித்த கட்டுரைகளை எழுதியும் தங்கள் கலை திறனை வெளிப்படுத்தினர்.  மேலும் இந்த நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்..மாவட்ட அளவில் நடைபெறும் இந்த கலை போட்டியில் வெற்றி பெறும் மாணவ மாணவிகளுக்கு பரிசாக ரொக்க தொகை வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

Tags:    

Similar News