கலைஞர் நூற்றாண்டு விழா நுழைவு வாயில் திறப்பு

செய்யாறு அருகே வெம்பாக்கம் தொடக்கப்பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு விழா நுழைவு வாயில் திறப்பு விழா நடந்தது.

Update: 2023-12-12 10:37 GMT

நுழைவாயில் திறப்பு விழா  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் ஒன்றியம்,ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் புதியதாக கலைஞர் நூற்றாண்டு விழா நுழைவுவாயில் கட்டப்பட்டு அதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்த செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குனரும், வடக்கு மாவட்ட செயலாளருமான எம்.எஸ்.தரணிவேந்தன், எம் எல் ஏ ஒ.ஜோதி ஆகியோர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பரிந்துரையில் கட்டப்பட்ட ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டிலான கலைஞர் நூற்றாண்டு நுழைவு வாயிலை திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார் தலைமை செயற்குழு உறுப்பினர் வேல்முருகன், ஒன்றிய குழு தலைவர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய ஒன்றிய கழக செயலாளர் ஜெ சி கே சீனிவாசன் வரவேற்றார். அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் சங்கர், தினகரன், ரவிக்குமார்,ஞானவேல்,நகர விஸ்வநாதன்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தெய்வமணி,ஒன்றிய குழு உறுப்பினர் ஜெயந்தி சிவப்பிரகாசம் ஊராட்சி மன்ற தலைவர் அருள் தேவி செந்தில்குமார், தொண்டரணி அமைப்பாளர் செயலாளர் ராம் ரவி,பள்ளியின் தலைமை ஆசிரியர்,அரசு அலுவலர்கள், திமுக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா முன்னிட்டு திமுக கொடியேற்று விழா ஆதி திராவிட குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ ஜோதி தலைமை தாங்கினார். திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர்எம்.எஸ்.தரணிவேந்தன கொடியேற்றி வைத்தார். பின்னர் அங்குள்ள அம்பேத்கர் திருஉருவ சிலைக்கு மாவட்ட செயலாளர், எம்எல்ஏ,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உள்ளிட்டோர் கூட்டாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்ன நடந்த கூட்டத்தில் அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பேசினார்கள். பின்னர் 200 பேருக்கு சேலைகள் உள்ளிட்ட நல திட்ட உதவிகளை வழங்கினர்.

Tags:    

Similar News