கலைஞர் நூற்றாண்டு விழா - கடலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்
Update: 2023-11-26 01:43 GMT
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூரில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நல துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் சி.வே.கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா ராஜேந்திரன், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, மற்றும் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.