கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கம்

கலைஞர் நூற்றாண்டு விழா கருத்தரங்கில் வெற்றி பெற்றவர்களுக்கு தலைமை கொறாடா கோவை செழியன் பரிசு வழங்கினார்.;

Update: 2024-01-05 06:05 GMT

பரிசு வழங்கியபோது 

 கரூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி "சட்டமன்ற நாயகர் கலைஞர்" என்ற தலைப்பில்,இன்று துவங்கி 2 நாட்கள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் இன்று கரூர் அரசு கலைக் கல்லூரி, மண்மங்கலத்தில் உள்ள அரசு மகளிர் கலை & அறிவியல் கல்லூரி, ஜெயராம் கலை & அறிவியல் கல்லூரிகளில் முதல் நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்த கருத்தரங்கத்திற்கு அரசு தலைமை கொறடா கோவி.செழியன் தலைமை தாங்கினர். மாவட்ட ஆட்சியர் தங்கவேல், அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்,தலைமை கொறடா கோவை செழியன், மறைந்த கருணாநிதி குறித்தும், அவர் ஆற்றிய பணிகள் குறித்தும் பேசினர். தொடர்ந்து, பகுத்தறிவு சீர்திருத்த செம்மல், நவீன தமிழ்நாட்டின் சிற்பி, சமூக நீதி காவலர், பெரியார் வழியில் கலைஞர், பெண்ணுரிமை உள்பட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கில் பங்கேற்ற பள்ளி & கல்லூரி மாணவ-மாணவிகள் பேசினர். அவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ்களையும், போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்க ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News