காளியம்மன் கோயில் பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் !!!

நத்தம் அருகேயுள்ள கோபால்பட்டி மற்றும் பந்தி பொம்மிநாயக்கனூரில் ஊர்களில் அமைந்துள்ள காளியம்மன் கோயில் திருவிழா பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2024-05-23 05:54 GMT

காளியம்மன் கோயில்

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அடுத்துள்ள கோபால்பட்டியில் காளியம்மன் கோயில் அமைந்துள்ளது.இந்த கோயிலில் உற்சவ திருவிழா,சாமி சாட்டுதல் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கடந்த 14-ஆம் தேதி தொடங்கியது.

இதையொட்டி தினமும் மாலையில் கோவில் வளாகத்தில் பெண்கள்,சிறுமிகள் கும்மி அடித்து நடனமாடி அம்மனை வழிபட்டு வருகின்றனர்.அதன்படி பக்தர்கள் கோவில் வளாகத்தில் கும்மி அடித்து நடனம் ஆடினர்.அதன்பிறகு இரவில் அம்மன் ஜோடிக்கப்பட்டு வானவேடிக்கை பெண்களின் முளைப்பாரி ஊர்வலம் தொடர இன்று அதிகாலை கோவிலை வந்தடைந்தது.

அதனைத் தொடர்ந்து மக்கள் பொங்கல் வைத்து,கிடா வெட்டி, பால்குடம்,அலகு குத்தி தீச்சட்டி எடுத்தும்,குழந்தைகளுக்கு கரும்பில் தொட்டியில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.இதை தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

Tags:    

Similar News