கள்ளக்குறிச்சி ஆட்சியர் அழைப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 12.06.2024 முதல் 28.06.2024 வரை நடைபெற உள்ள பசலிக்கான வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1433-ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நிகழ்ச்சி எதிர்வரும் 12.06.2024 முதல் 28.06.2024 வரை அரசு விடுமுறை நாட்கள் மற்றும் சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் தவிர்த்து ஏனைய நாட்களில் வருவாய் தீர்வாய அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது.
அதன்படி, மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் சின்னசேலம் வட்டத்தில் 12.06.2024 முதல் 20.06.2024 வரையிலும், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வாணபுரம் வட்டத்தில் 12.06.2024 முதல் 24.06.2024 வரையிலும், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தலைமையில் கல்வராயன்மலை வட்டத்தில் 12.06.2024 முதல் 18.06.2024 வரையிலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையில் திருக்கோவிலூர் வட்டத்தில் 12.06.2024 முதல் 21.06.2024 வரையிலும், உதவி ஆணையர் (கலால்) தலைமையில் கள்ளக்குறிச்சி வட்டத்தில் 12.06.2024 முதல் 24.06.2024 வரையிலும், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் சங்கராபுரம் வட்டத்தில் 12.06.2024 18.06.2024 வரையிலும் மற்றும் திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் உளுந்தூர்பேட்டை வட்டத்தில் 12.06.2024 முதல் 28.06.2024 வரையிலும் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெறவுள்ளது.
மேலும், இம்மாதம் 12.06.2024 முதல் 28.06.2024 வரை தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகங்களில் வருவாய் தீர்வாயம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் வருவாய்துறை தொடர்பான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.
மேலும், ஜமாபந்தி நடைபெறுவதால், மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் (GDP) 24.06.2024 திங்கள் கிழமைகளில் நடைபெறாது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன்குமார், தெரிவித்துள்ளார்.