கல்லூரி கனவு நிகழ்ச்சி

கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-05-10 12:08 GMT

12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது, 2,200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு.... பெரம்பலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிக் கனவு என்ற உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம், தலைமையில் மே ஒன்பதாம் தேதி தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நான்முதல்வன் திட்டத்தின் கீழ் இந்த கல்லூரிக்கனவு நிகழ்ச்சி இரண்டாவது   முறையாக .   இந்த ஆண்டிற்கான கல்லூரிக்கனவு நிகழ்ச்சி இன்று  நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 42 அரசு மேல்நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த சமார் 2200க்கும் மேற்பட்ட மாணவ மணாவிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வெழுதி வெற்றி பெற்று பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப்பணியாளராக பல்வேறு துறைகளில் பொறுப்பேற்றுள்ளவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் மரக்கன்றுககளை வழங்கி வாழ்த்தினார். அரசுப்பணியில் சேர்ந்துள்ளவர்கள் தங்கள் அனுபவங்களை, போட்டித்தேர்வுகளை எதிர்கொண்ட விதத்தை  உரையாற்றி அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கமளித்தார்கள். மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு வரவேற்புரையாற்றினார். சார் ஆட்சியர் கோகுல்,போட்டித் தேர்வுகள் எதற்கு? என்ற தலைப்பில் மாணாக்கர்களிடையே உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்த போது, இங்கு உயர் கல்வியில் என்னென்ன படிப்புகள் உள்ளது, எந்த படிப்பிற்கு என்னென்ன வேலை வாய்ப்புகள் உள்ளது, உயர்கல்விக்கு கல்விக்கடன் எவ்வாறு பெற வேண்டும் என்பது குறித்து, அரசுத்துறைகள், பல்வேறு தனியார் கல்வி நிறுவனங்கள், வங்கிகளின் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது, இந்த அரங்குகளை அனைவரும் பார்வையிட்டு பயன்பெற வேண்டும் இந்த நிகழ்ச்சியை நீங்கள் அனைவரும் பயன்படுத்திக் கொண்டு உயர் கல்வி பயின்று வாழ்க்கையில் சிறந்த நிலைக்கு வர வேண்டும் என வாழ்த்துகின்றேன். என தெரிவித்தார். விழாவில் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு வீடியோக்கள் ஒளிபரப்பப் பட்டது. பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்லூரிக்கனவு வழிகாட்டி கையேடுகளும், மரக்கன்றுகளும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், முதன்மைக்கல்வி அலுவலர் மணிவண்ணன், திறன் மேம்பாட்டுத் துறை உதவி இயக்குநர் செல்வம், துணை காவல் கண்காணிப்பாளர் வளவன், மற்றும் அனைத்து அரசுத்துறைகளின் முதல்நிலை அலுவலர்கள், அரசு மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News