கல்வராயன்மலை சுற்றுலா தலமாக்கப்படும்; அதிமுக வேட்பாளர் வாக்குறுதி

கல்வராயன்மலையை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுப்பேன் என கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பிரச்சாரத்தில் உறுதி அளித்தார்.

Update: 2024-04-16 03:09 GMT

கல்வராயன்மலையை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுப்பேன் என கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பிரச்சாரத்தில் உறுதி அளித்தார்.   

மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதி பெற்று கல்வராயன்மலையை சுற்றுலாத் தலமாக்க நடவடிக்கை எடுப்பேன்' என அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பிரசாரம் மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு, கல்வராயன்மலையில் உள்ள கரியாலுார், பொட்டியம், வெள்ளிமலை, மாயம்பாடி, தொரடிப்பட்டு, கொட்டபுத்துார், சின்னதிருப்பதி, மாவடிப்பட்டு, குண்டியாநத்தம், இன்னாடு, சேராப்பட்டு, கிளாக்காடு என 15 ஊராட்சிகளில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், 'கல்வராயன்மலையில் உள்ள மேகம், கவியம், சிறுகல்லுார் போன்ற நீர்வீழ்ச்சிகளுக்கு சாலை வசதி ஏற்படுத்துவேன். மத்திய அரசிடம் இருந்து சிறப்பு நிதி பெற்று கல்வராயன்மலையை ஊட்டிக்கு நிகரான சுற்றுலாத்தலமாக மேம்படுத்துவேன்.

வனத்துறையினர் அனுமதியின்றி கல்வராயன்மலையில் உள்ள பல்வேறு கிராமங்களில் சாலைப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, வனத்துறை அனுமதி பெற்று சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பேன். வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் கடுக்காய் அல்லது ஜவ்வரிசி தொழிற்சாலை அமைக்க உறுதுணையாக இருப்பேன். மலைவாழ் மக்கள் பயன்படுத்தும் விளை நிலங்களுக்கு வருவாய்த்துறை மூலம் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பேன். மூலிகை செடிகள் பரவலாக வளரும் கல்வராயன்மலையில் மூலிகைப்பண்ணை தொழிற்சாலை அமைப்பதுடன், மூலிகை செடிகளை வளர்க்க ஊக்குவிப்பேன்' என்றார்.

Tags:    

Similar News