கமலஹாசன் பொள்ளாச்சியில் தேர்தல் பரப்புரை
மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் திமுக வேட்பாளரை ஆதரித்து பொள்ளாச்சியில் தேர்தல் பரப்புரை செய்தார்.
விவசாயத்திற்கு தனிபட்ஜெட்,2லட்சம் மின் இனைப்பு போன்றவை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்,இது தான் திரவிடல் மாடல் ,திராவிட மாடலை யாரும் கிண்டல் செய்ய வேண்டாம் என பொள்ளாச்சியில் திமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் போது மநீம தலைவர் கமலஹாசன் பேச்சு.. பொள்ளாச்சி.. ஏப்ரல்..16 தமிழகத்தில் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் பிரச்சார சூடு பிடித்து துவங்கியுள்ளது.. இதில் திமுக அதிமுக பாஜக உள்ளிட்ட பல்வேறு கூட்டணி கட்சியினரை சேர்ந்த போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கட்டங்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பகுதியில் மக்களவை த் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஈஸ்வர சாமியை ஆதரித்து நடிகரும் மக்கள் நீதி மையத்தின் கட்சியின் தலைவருமான கமலஹாசன் இன்று பொள்ளாச்சி பேருந்து நிலையம் பகுதியில் பொதுமக்கள் அடியே வேட்பாளர் ஈஸ்வர சாமியை ஆதரித்து வாக்கு சேகரிப்பு பரப்புரையில் ஈடுபட்டார்.
அவர் பேசுகையில் 60 வருடங்களாக பொள்ளாச்சிக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு தமிழகத்தில் மொத்தம் நான்கு கோடி தென்னை மரங்கள் உள்ளது அதில் குறிப்பாக தமிழகத்திலேயே அதிக அளவில் பொள்ளாச்சி பகுதியில் மட்டும் தான் இரண்டு கோடி தென்னை மரங்கள் உள்ளன. விவசாயிகளுக்கு நல வாரியம் அமைத்தது, உழவர் சந்தை அமைத்தது , விவசாயிகளுக்கு 7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. இப்படி விவசாயிகளுக்காக செய்வதுதான் திராவிட மாடல் ஆகவே யாரும் திராவிட மாடலை கிண்டலாக பேசக்கூடாது.. இலவச மின்சாரம், விவசாயத்திற்கு தனி பட்ஜெட், 2 லட்சம் மின் இணைப்பு போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பத்து ஆண்டில் மத்திய அரசு விவசாயத்திற்காக என்ன செய்தது? விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு டெல்லிக்கு சென்ற விவசாயிகளை ஆணி படுக்கை கொண்டு வரவேற்பு அளித்தது தான் மத்திய அரசு.. ஆகவே எந்த அரசு வேண்டும் என்பதை மக்கள் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும் நல்லதை நினைத்து வாக்களியுங்கள் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள். நாளை நமது ஆக வேண்டும் என்று நினைத்து வாக்களியுங்கள் என்று பொள்ளாச்சி வேட்பாளர் ஆதரித்து பேசிய மக்கள் நீதி மையத்தின் கட்சி தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்..