காமராஜர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமா அதிர்ச்சி அளிக்கிறது - தினகரன்
காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜினாமா அதிர்ச்சி அளிக்கிறது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Update: 2024-05-04 00:54 GMT
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் பல ஆண்டுகளாக நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் அந்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் தமிழக ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கி இருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று அறிக்கை வெளியிட்டுள்ள டி டி வி தினகரன் பல்கலைக்கழகங்களில் நிலவும் நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண வலியுறுத்தியுள்ளார்