காமாட்சியம்மன் கோவிலில் உண்டியல் வருவாய்  ரூ.37 லட்சம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் 37 லட்சத்து 12,347 ரூபாய் ரொக்கமும், 222 கிராம் தங்கமும், 241 கிராம் வெள்ளியும் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது

Update: 2024-05-02 06:55 GMT

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் 37 லட்சத்து 12,347 ரூபாய் ரொக்கமும், 222 கிராம் தங்கமும், 241 கிராம் வெள்ளியும் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை ஹிந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் வாயிலாக எண்ணப்பட்டு வருகிறது. அதன்படி, கோவிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், செயல் அலுவலர் சீனிவாசன், ஹிந்து சமய அறநிலையத் துறை, காஞ்சிபுரம் சரக ஆய்வர் பிரித்திகா ஆகியோர் முன்னிலையில், பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக எண்ணப்பட்டன.

இதில், 37 லட்சத்து 12,347 ரூபாய் ரொக்கமும், 222 கிராம் தங்கமும், 241 கிராம் வெள்ளியும் கோவிலுக்கு வருவாயாக கிடைத்துள்ளது என, கோவில் செயல் அலுவலர் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News