சர்வதேச போட்டிக்கு கம்பம் மாணவர்கள் தேர்வு
சர்வதேச யோகா போட்டியில் பங்கேற்பதற்கு கம்பம் பள்ளி மாணவர்கள் தேர்வாகினர்.;
Update: 2023-10-23 04:22 GMT
சர்வதேச போட்டிக்கு தேர்வான மாணவர்கள்
இலங்கையில் வருகிற பிப்ரவரி மாதம் சர்வதேச யோகா போட்டிகள் நடக்கின்றன. இதில் பங்கேற்க மாணவ மாணவிகளை தேர்வு செய்வதற்கான போட்டிகள் தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்றது. இதில் 11 வயது முதல் 14 வயது வரை நின்ற நிலை பிரிவு ,அமர்ந்த நிலை பிரிவு, பேலன்ஸ் பிரிவில் கம்பம் நாகமணியம்மாள் மெட்ரிக் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் வெற்றி பெற்று சர்வதேச போட்டிக்கு தேர்வாகினர்.