கம்மாபுரம்: 33 இடங்களில் திமுக கொடியேற்றம்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கம்மாபுரம் பகுதியில் 33 இடங்களில் திமுக கொடியை அமைச்சர் கணேசன் ஏற்றி வைத்தார்.

Update: 2024-02-06 02:30 GMT

கொடியேற்றம் 

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் கம்மாபுரம் கிழக்கு ஒன்றியத்தில் 33 இடங்களில் திராவிட முன்னேற்றக் கழக கொடியினை தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் கணேசன் ஏற்றி வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News