பணிகளை விரைந்து முடிக்க காஞ்சி கலெக்டர் உத்தரவு
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, சிறுகாவேரிபாக்கம் மற்றும் புஞ்சையரசந்தாங்கல் ஆகிய ஊராட்சிகளில், பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-18 15:35 GMT
பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு
காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, சிறுகாவேரிபாக்கம் மற்றும் புஞ்சையரசந்தாங்கல் ஆகிய ஊராட்சிகளில், பல்வேறு வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்தார். புஞ்சையரசந்தாங்கல் கிராம மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில், சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
அதே கிராமத்தில் கட்டி வரும் பழங்குடியினத்தவர்களின் வீடுகளின் கட்டுமான பணிகளை, விரைவாக முடிக்க வேண்டும். இதையடுத்து, சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் வரியினங்களை வசூலிக்கும் முறையை ஆய்வு செய்தார். பொது மக்களுக்கு வழங்கும் சேவைகள் தடையின்றி வழங்க வேண்டும் என,
கலெக்டர் கலைச்செல்வி அறிவுரை வழங்கினார். இதில், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் ஜெயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.