காஞ்சி சங்கர விஜயேந்திரர் ஜெயந்தி. மஹோத்சவம்
மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55வது ஜெயந்தி மஹோத்சவம், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் கடந்த 5ல் துவங்கியது.
காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 55வது ஜெயந்தி மஹோத்சவம், காஞ்சிபுரம் சங்கரமடத்தில் கடந்த 5ல் துவங்கியது. விழாவையொட்டி தினமும், காலை 9மணிக்கு வேத பாராயணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
மாலை 6மணிக்கு விதுஷி காயத்ரி வெங்கடராமன் குழுவினரின் வாய்பாட்டும், 6ல் வித்வான் விஷ்ணுதேவ் நம்பூதிரி குழுவினரின் வாய்பாட்டும் நடந்தது. சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி உற்சவமான நேற்று, காலை 7மணிக்கு ஹோமம், வேத பாராயணம், ஹோமம் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, மஹா பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்,
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனத்தில் விசேஷ அபிஷேக அலங்காரம், மஹா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு வித்வான் பத்மதேஷ் பரசுராமன் குழுவினரின் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் சங்கரமடம் மேலாளர் சுந்தரேச அய்யர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்."