பேருந்தில் தொங்கியபடி பயணிக்கும் மாணவர்கள் - எப்போது தீர்வு?
உத்திரமேரூரில் தனியார் பேருந்தின் பின்புறத்தில் மாணவர்கள் தொங்கி செல்வதை பார்த்து பொதுமக்கள் அச்சமடைந்தனர்.;
By : King 24x7 Website
Update: 2023-10-19 11:06 GMT
பேருந்தின் ஏணியில் பயணித்த மாணவர்கள்
காஞ்சிபுரம் உத்திரமேரூர் சாலையில் திருப்புலிவனம் அருகே தனியார் பேருந்தில் பின்புறம் உள்ள ஏணியில் பயணம் செய்யும் காட்சியினை கண்ட பொதுமக்கள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர். பொதுவாகவே இது போன்ற நிகழ்வுகள் நீண்ட நாளாகவே இருக்கும் நிலை தீர்வு காண்பது அரிதா? என கேள்வி எழுகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.