காஞ்சிபுரம் : இருள் சூழ்ந்த ஐந்து முனை சாலை சந்திப்பு

காஞ்சிபுரம் ஐந்துமுனை சாலை சந்திப்பு பகுதியில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2024-03-14 05:48 GMT

போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்த சாலை 

காஞ்சிபுரத்தில் இருந்து, அரக்கோணம், வேலுார், திருத்தணி, திருப்பதி, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் சாலை தெரு வழியாக செல்கின்றன. சாலைத் தெருவுடன், ஏகாம்பரபுரம் தெரு, சர்வதீர்த்தம் தென்கரை, சாத்தான்குட்டை தெரு இணையும் ஐந்து முனை சாலை சந்திப்பில், பேருந்து நிறுத்தம், குளக்கரை மாரியம்மன் கோவில், திருமண மண்டபம், வணிக வளாகம்,உணவகம் என உள்ளதால், இப்பகுதி வாகன போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாக உள்ளது. ஆனால், போதுமான மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்படவில்லை. இதனால், இரவு நேரத்தில் வெளிச்சம் இல்லாமல் உள்ளது. எனவே, ஐந்துமுனை சாலை சந்திப்பு பகுதியில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்."
Tags:    

Similar News