அரசு பள்ளி மாணவர்களுக்கு கணினி தொழில்நுட்ப பயிற்சி !
காஞ்சிபுரம் மாவட்டம் அரசு பள்ளி மாணவர்களுக்கு, நவீன உலகத்தில் கணினியின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு பயிற்சி நடத்தது.
By : King 24x7 Angel
Update: 2024-02-28 07:37 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் ஜேப்பியார் தொழில்நுட்ப கல்லுாரி மற்றும் மிஸ்டர் கூப்பர் சர்வதேச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இணைந்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு, நவீன உலகத்தில் கணினியின் முக்கியத்துவம் குறித்து சிறப்பு பயிலரங்கம் கல்லுாரியில் நடந்தது. ஜேப்பியார் கல்லுாரி டீன் மதுசூதனன் தலைமை தாங்கினார். மிஸ்டர் கூப்பர் நிறுவனத்தின் இந்திய தலைவர் மோகன்பாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாணவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். இதில், மிஸ்டர் கூப்பர் நிறுவனத்தைச் சேர்ந்த 70 சிறப்பு பயிற்றுனர்கள் பங்கேற்று, மணி நேரக் குறியீடு' என்ற தலைப்பில், கோடிங், புரோகிராமிங், கேமிங், பைத்தான், ஜாவா, புல்ஸ்டாக் டெவலப்மென்ட் ஆகிய உலகின் முன்னணி தொழில்நுட்பங்கள் குறித்து, அரசு பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியே பயிற்சியுடன் விளக்கம் அளித்தனர். இதில், 150 பேர் பங்கேற்ற நிலையில், சிறப்பாக செயல்பட்ட 10 மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது. மிஸ்டர் கூப்பர் நிறுவனத்தின் பயிற்றுனர் ப்ரீத்தி சந்திரசேகரன் நன்றியுரை வழங்கினார்.