காஞ்சிபுரம் : காவணிப்பாக்கம் சாலைக்கு 15 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த விமோச்சனம்..!

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ரூ. 3.20 கோடி மதிப்பிலான சாலை சீரமைப்புப் பணிகளை எம்.எல்.ஏ., சுந்தர் தொடங்கி வைத்தார்.

Update: 2023-10-28 08:47 GMT

சாலை சீரமைப்புப் பணிகளை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் இருந்து, பொற்பந்தல் வழியாக திருமுக்கூடல் செல்லும் சாலை உள்ளது. எடமச்சி, பட்டா, காவணிப்பாக்கம், பேரணக்காவூர் உள்ளிட்ட பல கிராமங்களைச் சேர்ந்தவர்கள், இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து, இரண்டு அரசு பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இச்சாலை வழியாக சாலவாக்கம் வரை இயங்குகின்றன. இச்சாலையில் பொற்பந்தல் அடுத்த பேரணக்காவூர், காவணிப்பாக்கம், பட்டா ஆகிய கிராம எல்லைகளுக்கு உட்பட்ட 3 கி.மீ., துாரம் கொண்ட சாலை, 15 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்து, குண்டும் குழியுமாக உள்ளது. பழுதடைந்துள்ள சாலை பகுதி, வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், சாலை அமைக்க அனுமதி பெற வேண்டி இருந்தது. வனத்துறை அதிகாரிகள் சாலை அமைக்க அனுமதி தராததால், சாலையை சீரமைப்பதில் தாமதமாவதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறிவந்தனர். இந்நிலையில், இச்சாலையை சீரமைக்க, வனத்துறை சார்பில், சில மாதங்களுக்கு முன் ஒப்புதல் அளிக்கப்பட்டது. தொடர்ந்து, 2023- - 24ம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 3.20 கோடி ரூபாய் செலவில் இச்சாலை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பூமி பூஜை விழா நேற்று நடந்தது. உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர் பங்கேற்று சாலை பணியை துவக்கி வைத்தார்.
Tags:    

Similar News