காஞ்சிபுரம் : கோயில்களில் நவராத்திரி விழா நிறைவு

காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள் கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் நவராத்திரி விழா நிறைவடைந்தது.

Update: 2023-10-27 13:54 GMT

நவராத்திரி விழா நிறைவு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள் கோவிலில் நவராத்திரி விழா, கடந்த 14ல் துவங்கியது. நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு பிள்ளை பெற்ற பேரரசி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். காஞ்சிபுரம் அய்யப்பா நகர், தாய் படவேட்டம்மன் கோவிலில், 45வது ஆண்டு நவராத்திரி விழா, கடந்த 14ல் துவங்கியது. நேற்று முன்தினம் இரவு விஸ்வரூப தரிசனம் நடந்தது. நிறைவு நாளான நேற்று, காலை 9:00 மணிக்கு பால்குடம் ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள், அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு, பிள்ளைகளை காத்தருளும் பேரரசி அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து ஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது. காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு, ராஜ கணபதி, பாவி அம்மன், பாலமுருகன் கோவிலில் கடந்த 15ல் நவராத்திரி விழா துவங்கியது. விழா நிறைவு நாளான நேற்று மதியம் 12:00 மணிக்கு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. சாந்தசொரூபிணி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். மாலை 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது.
Tags:    

Similar News