திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா கோலாகலம்
Update: 2023-11-16 06:47 GMT
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழா நேற்று காலை கோலாகலமாக தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் மலைக்கோயில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். காவடி மண்டபத்தில் சண்முகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வில்வ இலைகளால் லட்சார்ச்சனை நடைபெற்று வருகின்றது. ஏராளமான முருகன் பக்தர்கள் முருகன் மாலை அணிந்தும் விரதம் இருந்து வருகின்றனர். வரும் 18ஆம் தேதி சண்முகருக்கு புஷ்பாஞ்சலி சேவை நடைபெற உள்ளது. திருக்கோயில் நிர்வாகம் சார்பில் கந்த சஷ்டி திருவிழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது.