கெங்கவல்லி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா
By : King 24X7 News (B)
Update: 2023-11-18 04:24 GMT
முருக பெருமான்
கெங்கவல்லி:கெங்கவல்லியில் உள்ள ஸ்ரீபாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கந்த சஷ்டிவிழா, திருக்கல்யாண நிகழ்ச்சி சனி, ஞாயிற் றுக்கிழமைகளில்நடைபெறுகிறது.
திருவண்ணாமலை திருமுதுகுன்ற துறையூர் ஆதினத்துக்கு உள்பட்ட கெங்கவல்லிஸ்ரீ பாலதண்டாயுதபாணிகோயிலில் சனிக்கிழமை மாலை தசஷ்டி விழா நடைபெறுகிறது.
இதையொட்டி மூலவருக்கு அபிஷேகம், ஆராதனை, அமுதுதானம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணி அளவில் வடக்கு வீதி செல்வகணபதி கோயிலில் இருந்து சீர்வரிசை எடுத்து வருதல், மாலை 4 மணிக்கு மகா யாக வேள்வி, அதனையடுத்து சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நடைபெறுகிற.