வெள்ளகோவிலில் திமுக வேட்பாளரை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம்

ஈரோடு மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து வெள்ளகோவில் பகுதியில் திமுக மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-29 03:08 GMT

கனிமொழி எம்.பி பிரச்சாரம்

வெள்ளகோவில் கடைவீதியில்  மாலை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி பேசியதாவது:- கூடியிருக்கும் இந்த கூட்டத்தை பார்க்கும் பொழுது மிகவும் மன நிறைவாக உள்ளது. எனவே மன திருப்தியுடன் நான் இங்கு இருந்தே கிளம்பி செல்ல இருக்கின்றேன் என பேச்சை துவங்கினார். இந்த கூட்டமே நமது வெற்றிக்கு அடித்தளமாக அமைகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

மேலும் இதுவரை மாநில பொறுப்பில் இருக்கும் பிரகாஷ் அவர்கள் அடுத்த கட்டமாக வரவிருக்கும் ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு எம் பி வேட்பாளராக நமது கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசியோடு களம் இறங்கி இருக்கிறார். இவருக்கு தொடர்ந்து உங்களின் ஆதரவும் வாக்குகளையும் தந்து அவரை ஆதரித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்றார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்டமன்ற தொகுதியுமான ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு தொகுதிகளில் ஒன்று காங்கேயம் தொகுதியில் தேர்தல் வாக்குறுதியாக இப்பகுதியில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய மருத்துவ பயன்பாட்டிற்கு புதிய மருந்தகம் அதாவது கேன்சர் சம்பந்தப்பட்ட நோய்க்கு புதியதொரு மருத்துவமனை கட்டப்பட்டு அதை உரிய முறையில் செயல்படுத்த வேண்டும் என்பது இப்பகுதிக்கு உண்டான வாக்குறுதியில் ஒன்று என்றார்.

திமுக ஆட்சியில் மட்டும்தான் அனைவரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்துழைப்புடன் ஆதரவுடன் மனிதநேயத்துடன் பழகுகின்றனர் இதுவே மத்திய அரசு ஆளுகின்ற பாரதிய ஜனதா கட்சி ஆளும் போது ஒருத்தருக்கு ஒருத்தர் எதிரியாகவும் மனிதாபிமானம்  வேறுபட்டுடன் இருக்கின்றனர். அதேபோல் வட மாநிலங்களில் பெண்களுக்கு அநீதி அழிக்கப்பட்டுள்ளது என்பதை நம் கண் கூட பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இதுவரை அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது அனைவருக்கும் அறிந்தது. பிரதமர் ஒரு முறை கூட சென்று அந்த ஏழை எளிய மக்களையும் பாதிக்கப்பட்ட பெண்களும் பார்வையிட ஆதரவு தெரிவிக்க விசாரிக்க வரவில்லை. அதே போல் முக்கியமாக விவசாயிகளுக்கு எதிரான கட்சியாக இதுவரை செயல்பட்டு கொண்டிருக்கிறது விவசாயிகள் உயிரிழக்கும் வரையிலும் அரசு கீழ இறங்கி வராமல் பிடிவாதமாக இருந்து வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் பிஜேபி அரசு மற்றும் மோடி இதற்கு எதிரான மாநிலம் தமிழ்நாடு இருந்து வருகின்றது.அதிமுக கட்சியும் எடப்பாடி பழனிச்சாமிக்கும்  வாக்கு போடுவதை தவிர்த்து வருகின்றனர் என்றும் மக்களுக்கு உறுதுணையாக இருந்து வரும் கட்சி திமுக கட்சிக்கு உங்கள் வாக்குகளை செலுத்த வேண்டும் எனவே இந்த தேர்தல் என்பது விடுதலை போராட்டம் என்பது போல நமது கழக தொண்டர்களின் நிர்வாகிகளும் உறுதுணையாக செயல்பட்டு வெற்றியடைய செய்ய வேண்டும். என்றார்.

Tags:    

Similar News