திருமாங்கல்ய தங்கம், திருமண நிதி உதவி வழங்கிய கனிமொழி எம்பி
தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு திருமாங்கல்ய தங்கம் மற்றும் திருமண நிதி உதவியை கனிமொழி எம்பி வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மணியம்மை நினைவு விதவை மகள் திருமண உதவித் திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதி உதவித் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண நிதி உதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மூலம் 742 பயனாளிகளுக்கு தலா எட்டு கிராம் தங்கம் மற்றும் நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது .
தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமிபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற திமுக குழு துணை தலைவர் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் துறை அமைச்சர் கீதா ஜீவன் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மேயர் ஜெகன் பெரியசாமி, ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பிரேமலதா உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்