வரும் 11ம் தேதி நாமக்கல்லுக்கு கனிமொழி விசிட்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக., சார்பில் துணை பொதுச் செயலாளர் கனிமொழி வரும் 11ம் தேதி நாமக்கல்லுக்கு வரவுள்ளார்.

Update: 2024-02-07 14:29 GMT

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் அறிக்கை கழக தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி 2024-நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மாண்புமிகு கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களுக்கு பயணம் செய்து பொதுமக்கள், கழக நிர்வாகிகளைச் சந்தித்து தேர்தல் அறிக்கைக்கான பரிந்துரைகள் கேட்கும் பணி நடைபெற்றுக்கொண்டுள்ளது.

அதன்படி, வருகின்ற 11.02.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சேலம், ரேடிசன் ஹேட்டலுக்கு, தேர்தல் அறிக்கை குழு வருகை தரவுள்ளதால் நாமக்கல் மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட வணிகர் சங்கங்கள், விவசாய முன்னேற்ற சமூக சங்க கூட்டமைப்பு, சிறு, குறு விவசாயிகள் சங்கம், பால் உற்பத்தியாளர்கள் சங்கம், வேற்றிலை விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம், விவசாயிகளின் பிரதிநிதிகள், நெசவாளர்கள், மீனவர் சங்கங்கள், தொழில் முனைவோர்கள், தொழிற்சங்கங்கள், மாணவர் சங்கங்கள், கல்வியாளர்கள், அரசு ஊழியர்களின் பிரதிநிதிகள், தொண்டு நிறுவனங்கள், தமிழ்நாடு கோழிபண்ணையாளர்கள் சங்கம், பஸ் உரிமையாளர்கள் சங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கம், ரிக் உரிமையாளர்கள் சங்கம், லாரி டிரைவர்கள் சங்கம், லாரி பாடி பில்டர் சங்கம், விசைத்தறி நெசவாளர்கள் சங்கம், சிறு, குறு சாய பட்டறை உரிமையாளர்கள் சங்கம், உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், தங்களது நிறுவனம், தொழில் அமைப்புகள், கிரசர் உரிமையாளர் சங்கங்கள் தொடர்பான ஒன்றிய, மாநில அரசின் சார்பில் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கை மனுக்கள் மற்றும் ஆலோசனைகளை, 2024-நாடாளுமன்ற தேர்தலுக்கான தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவிடம் வழங்கலாம். என் தெரிவித்தார்

Tags:    

Similar News