நலதிட்ட உதவிகளை வழங்கிய கனிமொழி

தூத்துக்குடியில் ரூ.29.37 கோடி மதிப்புலான நலதிட்ட உதவிகளை எம்.பி., கனிமொழி |வழங்கினார்.

Update: 2024-02-17 06:05 GMT

தூத்துக்குடியில் ரூ.29.37 கோடி மதிப்புலான நலதிட்ட உதவிகளை எம்.பி., கனிமொழி |வழங்கினார். 

தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டமைக்கான ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை இன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 545 பயனாளிகளுக்கு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டமைக்கான ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.29,37,294/ மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி தெரிவித்ததாவது: அரசுத் துறைகளை அன்றாடம் அணுகும் பொதுமக்களுக்கும் பொருளாதார விளிம்பு நிலையில் வசிக்கும் மக்களுக்கும் அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் முதற்கட்டமாக நகர்ப்புறப் பகுதிகளில் தமிழ்நாடு முழுவதும் கடந்த 18.12.2023 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. சேவைகள் வழங்கும் துறை சார்ந்த அலுவலர்கள் நேரடியாக மக்களிடம் சென்று அவர்களுக்குத் தேவையான சேவைகளை பராபட்சமின்றி செய்தல், ஏற்கனவே உள்ள நடைமுறைகளை குழலுக்கு ஏற்றவாறு மாற்றி நியாயமான சேவைகள் மக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்தல், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசின் உதவிகளை எதிர்பார்த்து இருக்கும் விளிம்புநிலை மக்களுக்கு சேவை செய்தல், நியாயமான சேவைகளை காலதாமதம் செய்யாமல் மக்களுக்கு உடனடியாக கிடைக்கச் செய்தல், அரசின் செயல்பாடுகளில் உள்ள சேவைகள் குறித்து மக்கள் திருப்தி அடையும் வகையில் அலுவலர்களின் செயல்பாடு இருத்தல் ஆகியவைதான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் 18.12.2023 முதல் மக்களுடன் முதல்வர் முகாம்கள் நடைபெற்ற நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட அதீத மழை வெள்ளம் காரணமாக அத்தினத்தில் துவங்கப்படவில்லை. வெள்ளப்பாதிப்பு நிவாரண பணிகள் நிறைவேற்றிய பின்னர் 11.01.2024 முதல் 31.01.2024 வரை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகரப் பகுதிகளிலும் 45 முகாம்கள் சிறப்பாக நடைபெற்றது அம்முகாம்களில் பெறப்பட்ட மொத்தம் 7133 கோரிக்கைகள் மக்களுடன் முதல்வர் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அம்மனுக்களில் 4071 மனுக்கள் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளன. 941 மனுக்கள் தகுதியின்மை காரணமாக தள்ளுபடி செய்யப்பட்டன. இதர மனுக்கள் இன்னும் இரு தினங்களுக்குள் முடிவு செய்யப்பட்டு விடும். ஏற்பளிப்பு செய்யப்பட்ட மனுக்களில் இன்றைய தினம் 545 பயனாளிகளுக்கு இந்த விழாவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டமைக்கான ஆணைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் என மொத்தம் ரூ.29,37,294/ மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது.

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் வாயிலாக மக்களின் நீண்ட நாள் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றை நிறைவேற்றி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு மக்களை சந்தித்து மனுக்களைப் பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் அந்த மனுக்களுக்கு தீர்வு காண்பதற்காக தனியாக ஒரு துறையை உருவாக்கி நடவடிக்கை எடுத்தார்கள். இதிலும் தூத்துக்குடி மாவட்டத்தில்தான் அதிக மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. .

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அரசு திட்டங்கள் மக்களை நேரடியாக சென்றடைகிறதா என்பதை சரிபார்த்து சரியான முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களுக்கு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் அரசாக விளங்கி வருகிறது என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் மக்களுடன் முதல்வர் திட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 13 துறை அலுவலர்கள்ஒரே இடத்தில் இருந்து மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நேரடி கண்காணிப்பில் தீர்வு காணப்பட்டது. இத்திட்டத்தில் பட்டா மாற்றம், தீர்வை மாற்றம் என பல்வேறு பயன்களை பொதுமக்கள் அடைந்துள்ளனர். ஒரு பயனாளி 12 ஆண்டுகளுக்கு பின் தனது மகன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதேபோல் எத்தனையோ பயனாளிகள் பயனடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 4071 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு 545 பேருக்கு இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் எந்த நோக்கத்தில் இந்த திட்டத்தினை கொண்டு வந்தார்களோ அந்த நோக்கம் நிறைவேறியுள்ளது என தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி. மார்க்கண்டேயன், மாவட்ட ஊராட்சி தலைவர் அ.பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஜஸ்வர்யா, மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மாநகராட்சி துணை மேயர் செ.ஜெனிட்டா, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் எம்.பிரபு மற்றும் அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News