கன்னியாகுமரி : காலை 11 மணி வரை 23. 93 சதவீத வாக்குகள் பதிவு

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பகல் 11 மணி நிலவரப்படி 23. 93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Update: 2024-04-19 07:36 GMT

பைல் படம் 

கன்னியாகுமரி மக்களவை தொகுதிக்குட்பட்ட கிள்ளியூர், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு , நாகர்கோவில் , கன்னியாகுமரி உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் இன்று மொத்தம் 1698 வாக்குசாவடிகளில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. குமரியின் மொத்த வாக்காளர்கள் மொத்தம்  15.57 லட்சம் பேர் ஆவார்கள். இந்த நிலையில் தேர்தல் நாளான இன்று காலை 7 மணி முதல் வாக்கு பதிவு தொங்கியது. பகல் 11 மணி வரை   23. 93 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

  இதில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி 61892 வாக்குகள் 20.92%,  நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 64 568 வாக்குகள் 24. 28%,  பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி 60838 வாக்குகள் 25.15%,  விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி 527 14 வாக்குகள் 22.17%, குளச்சல் சட்ட மன்ற தொகுதி 69473 வாக்குகள் 25.77%, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி 63339 வாக்குகள் 23.66% என வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News