கன்னியாகுமரி மாவட்ட மீனவர் வளர்ச்சி இயக்க கூட்டம் !
கன்னியாகுமரி கடலோர மீனவ வளர்ச்சி இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி கடற்கரை அலங்கர மாதா கோவில் தெரு சமூக நல கூடத்தில் நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-06-14 05:55 GMT
மீனவர் வளர்ச்சி இயக்க கூட்டம்
கன்னியாகுமரி கடலோர மீனவ வளர்ச்சி இயக்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் கன்னியாகுமரி கடற்கரை அலங்கர மாதா கோவில் தெரு சமூக நல கூடத்தில் நடந்தது. குமரி மாவட்ட மீன் விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவரும், தமிழக பா.ஜ.க மீனவர் பிரிவு மாநில செயலாளர் & பெருங்கோட்ட பொறுப்பாளரும், அகில இந்திய மீனவர் மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் நிறுவனர் - தலைவருமான சகாயம் தலைமை வகித்தார். கூட்டத்தில் அகில இந்திய மீனவர் மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழியாக வழங்கப்படும் வள்ளங்களுக்கான மானிய மண்ணெண்ணெய், மானிய என்ஜின் பெறுவது குறித்தும், மத்திய திட்டத்தின் கீழ் ரூபாய் 2 லட்சம் மானியத்துடன் கூடிய மானிய வள்ளங்கள் பெறுவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது.