கன்னியாகுமரி : நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.

Update: 2024-03-25 11:24 GMT

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டரிடம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மனு தாக்கல் செய்தார்.


கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி  தேர்தலில் காங்கிரஸ் - திமுக கூட்டணி, பாரதிய ஜனதா, அதிமுக கட்சிகளுடன் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இதனால் குமரியில் 4 முனைப் போட்டி உருவாகியுள்ளது.   குமரி தொகுதியை பொறுத்தவரை மற்ற கட்சிகள் வேட்பாளர்களை அறிவிப்பதற்கு முன்னரே, நாம் தமிழர் கட்சியின்  தலைமையால்  மரிய ஜெனிபர்  என்பவர் வேட்பாளராக கடந்த ஒரு மாதம் முன்னரே அறிவிக்கப்பட்டார்.      

வேட்பாளராக மரிய ஜெனிபர் அறிவிக்கப்பட்ட உடனே கன்னியாகுமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பரபரப்பாக தேர்தல் பணிகளை செய்து வருகிறார்.        இந்த நிலையில் இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  கட்சியின் சார்பில்  வேட்பாளராக மனு தாக்கல் செய்தார். மாவட்ட  கலெக்டர் ஸ்ரீதரிடம்  அவர் மனு தாக்கல் செய்தார்.  அவருடன் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஜஸ்டின் பெனடிக்ட் ராஜ், மண்டல செயலாளர் பெல்வின் ஜோ, நாகர்கோவில் மாவட்ட செயலாளர் மற்றும் தேர்தல் பொறுப்பாளர் ஜெயின்டின், செந்தமிழர் பாசறை அமீரக பொறுப்பாளர் தீபக் சாலமன் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News