பூட்டிய  வீட்டை உடைத்து 33 பவுன் நகை கொள்ளை

கன்னியாகுமரியில் பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து 33 சவரன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2024-06-06 03:28 GMT

பைல் படம் 

கன்னியாகுமரி சுனாமி காலனியை சேர்ந்தவர் பெல்கியாஸ் (39) இவர் சவுதி அரேபியாவில் மனைவி குழந்தைகளுடன் வசித்து, அங்கு வேலை பார்த்து வருகிறார். இதனால் கன்னியாகுமரியில் உள்ள அவரது வீட்டை உறவினர்கள் பராமரித்து வந்தனர்.      இந்த நிலையில் சம்பவத்தினம் அவரது தம்பி வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு ஆங்காங்கே பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் உள்ள ஒரு அறையில் பீரோவில் வைத்திருந்த 33 பவுன் தங்க  நகைகளையும் காணவில்லை.  

Advertisement

  இது குறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை பார்வையிட்டனர். மேலும் தடயவியல்  போலீசார் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாக இருந்த கைரேகைகள் பதிவு செய்தனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்து வருகின்றனர்.  வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்மந்த பட்ட ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News