எட்டுக்குடியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்

நாகை மாவட்டம் கீழையூர் ஒன்றியம் எட்டுக்குடியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

Update: 2023-12-26 11:01 GMT

எட்டுக்குடியில் சிறப்பு மருத்துவ முகாம். நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் எட்டுக்குடி ஊராட்சியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் எட்டுக்குடியில் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் லேகா காரல் மார்க்ஸ் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் டி.செல்வம் குத்துவிளக்கேற்றி முகாமினை தொடங்கி வைத்தார் திருப்பூண்டியில் இருந்து மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் முகாமில் கலந்து கொண்டு நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முகாமில் வந்து பயன்பெற்றனர்

Tags:    

Similar News