மணல் கொள்ளையில்போலீசாரை தள்ளிவிட்டு ஓடியவருக்கு வலைவீச்சு

நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக அழைத்துசெல்லப்பட்ட கைதி தப்பி ஓட்டம்

Update: 2024-02-28 13:46 GMT

தப்பி ஒடிய கைதி

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை தாலுகா திருவேகம்பத்தூர் காவல் நிலையத்தில் சருகனி ஆற்றுக்கரையில் சித்திக் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மணல் அள்ளியதாக சிறுநல்லூரை சேர்ந்த ஆனந்த் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவருக்கு சொந்தமான ஜேசிபி வாகனமும், டிப்பர் வாகனமும் கைப்பற்றப்பட்டது.

இந்நிலையில் அவரை கைது செய்து நீதிபதியிடம் ஆஜர்படுத்துவதற்காக கொண்டு சென்ற போது போலீசாரை தள்ளிவிட்டு தப்பித்து ஓடி விட்டார். இதே ஆனந்த் மீது ஏற்கனவே சாலைகிராமம் காவல் நிலையத்தில் மணல் அள்ளிக் கொண்டிருக்கும்போது காவல்துறையினர் பிடித்த போது காவலரை தாக்கிவிட்டு தப்பி சென்ற வழக்கும் நிலுவையில் உள்ளது.

இவர் மீது திருவேகம்புத்தூர் காவல் நிலையத்தில் ரவுடி லிஸ்டும் உள்ளதாக கூறப்படுகிறது. போலீசாரை தள்ளிவிட்டு தப்பித்து போன ஆனந்த் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News