காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா

புதுக்கோட்டை மாவட்டம்,காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-05-27 09:32 GMT

பொங்கல் விழா 

பொன்னமராவதி அருகேயுள்ள காரையூர் முத்துமாரியம்மன் கோயில் பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த 19 ஆம் தேதி காப்பு கட்டி பூச்சொரிதல் விழா நடைபெற்றது. தொடர்ந்து தினமும் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அம்மன் வீதி உலா, சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் திரளான பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டு, பால்குடம், முளைப்பாரி எடுத்து முக்கிய வீதியின் வழியாக வந்து அம்மனை வழிபட்டனர். விழாவில் திரளான பொதுமக்கள் வழிபட்டனர். தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

Tags:    

Similar News