தொடங்கப்படாத கரியன்கேட் மேம்பால பணி - வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-11-08 05:47 GMT

காத்திருக்கும் வாகன ஓட்டிகள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
காஞ்சிபுரம் அருகே கரியன்கேட்டில் உள்ள ரயில்வே கடவுப்பாதையில், மேம்பாலம் கட்டுவதற்கான அறிவிப்பு வெளியாகி, ஐந்தாண்டுகள் ஆகியும், திட்ட அறிக்கை இறுதி செய்யாமல் இழுத்தடிப்பதால், வாகன ஓட்டிகள் அன்றாடம் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில், நெடுஞ்சாலைத் துறை சார்பில் மேற்கொள்ளப்படும் மேம்பாலம், சாலை உள்ளிட்ட பணிகள், சரியான காலத்தில் துவங்காததால், வாகன ஓட்டிகள் தொடர்ந்து அவதிப்படுகின்றனர். வாலாஜாபாத் - அவலுார் இடையேயான பாலாறு உயர்மட்ட பாலம், 100 கோடி ரூபாயில் கட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை நிதி ஒதுக்கீடு செய்யாமல், 2.6 கோடியில், சேதமடைந்த தரைப்பாலத்தை சீரமைத்தனர். இதுவே அப்பகுதி மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதேபோல, காஞ்சிபுரம் - திருத்தணி சாலையில், வெள்ளைகேட் செல்லும் வழியில் உள்ள கரியன்கேட் ரயில்வே கடவுப்பாதையில் மேம்பாலம் கட்ட வேண்டிய பணிகள், நான்கு ஆண்டுகளாக இழுத்தடிப்பதால், வாகன ஓட்டிகள் அன்றாடம் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரத்திலிருந்து, அரக்கோணம், திருத்தணி, திருப்பதி போன்ற இடங்களுக்கு செல்லவும், அந்த பகுதியிலிருந்து காஞ்சிபுரம் நோக்கி வரவும், இந்த சாலையே பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரயில்வே கடவுப்பாதையில், ஒவ்வொரு நாளும் ரயில் செல்லும் நேரங்களில், நீண்ட நேரம், நெடிய துாரம் வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
Tags:    

Similar News