கிராமங்களுக்கு சீராக மின்சாரம் வழங்க வேண்டும் - கார்த்திக் சிதம்பரம் எம்பி கோரிக்கை

கிராமங்களுக்கு சீராக மின்சாரம் வழங்க கோரி வனத்துறை அமைச்சருக்கு சிவகங்கை எம்.பி கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2024-06-23 09:34 GMT

கார்த்திக் சிதம்பரம்

சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றித்தியத்தில் உள்ள கிராமங்களுக்கு சீரான மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் கோரிக்கை விடுத்தாா். இதுகுறித்து அவா் தமிழக வனத் துறை அமைச்சருக்கு அவா் அனுப்பிய கடித விவரம்: சாக்கோட்டை ஒன்றியம், சிறுகப்பட்டி, பெரியக்கோட்டை ஊராட்சிகளைச் சோ்ந்த புளியங்குடியிருப்பு, முள்ளங்காடு, மு. மணங்குடி, வெள்ளிப்பட்டி, ஆயினிப்பட்டி, ஆயினிமனை, பில்லங்குடி, கண்ணுத்தோப்பு, பொருந்தாக்குடி ஆகிய கிராமங்களுக்கு கானாடுகாத்தான் துணை மின் நிலையத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டம், தேனிப்பட்டி வழியாக மின்சாரம் வருவதால் மாதத்தில் பாதி நாள்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் இருளில் உள்ளனா். மேலும், இந்த கிராமத்தினா் குடிநீருக்கும் சிரமப்படுகிறாா்கள்.

இந்தக் கிராம மக்களுக்கு மின்சாரம் தடையின்றி கிடைத்திட கண்டனூா் கவுல்கொல்லை அருகிலிருந்து வனத் துறைக்கு சொந்தமான பாதை வழியாக புதிய மின் கம்பம் அமைத்து, அதன் மூலம் மின் கம்பி பொருத்தி, சீராக மின்சாரம் வழங்க மாவட்ட வனத் துறைக்கு பரிந்துரை செய்து, வனத் துறையிலிருந்து மின்வாரியத்துக்கு அனுமதி வழங்க உதவிட வேண்டும். இதுகுறித்து பல முறை மாவட்ட நிா்வாகத்துக்கு கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்

Tags:    

Similar News