கார்த்திகை தீப திருவிழா: சுகவனேஸ்வரர் கோவிலில் பரணி தீபம்
Update: 2023-11-27 01:36 GMT
பரணி தீபம்
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் தினத்தன்று சிவன்,முருகன் கோவில்களில் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சியாக நடத்தப்படும். அதன்படி தீபம் ஏற்றி வழிபாடு நடைபெறும். இந்தாண்டு கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி நேற்று அதிகாலை 4 மணிக்கு சேலம் சுகவனேசுவரர் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் சுகவனேசுவரர், சொர்ணாம்பிகை அம்மன், மற்றும் முருகனுக்கு பால், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை 5மணி அளவில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.