சங்ககிரி மலைக்கோட்டையில் கார்த்திகை தீபம்
சங்ககிரி மலைக்கோட்டை பெருமாள் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றம்;
By : King 24x7 Website
Update: 2023-11-26 03:40 GMT
சங்ககிரி மலைக்கோட்டை பெருமாள் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றம்
சேலம் மாவட்டம், சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு வரதராஜ பெருமாள்கோவிலில் கார்த்திக்கை தீபத்தையொட்டி சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதனையடுத்து கோவில் வளாகத்தில் கார்த்திகை தீபங்கள் ஏற்பட்டது. திருகார்த்திகை தீபத்தையொட்டி சங்ககிரி மலைக்கோட்டையில் ௩ வது நுழைவுவாயிலான கடிகார வாசலையடுத்துள்ள அருள்மிகு வரதராஜப்பெருமாள், ஸ்ரீ மகாலட்சுமி தாயார், ஸ்ரீ ஆண்டாள் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கராங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவில் வளாகம் முழுவதும் கார்த்திகை தீபங்களும், திருக்கோடி விளக்கும் ஏற்பட்டன. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோவில் பட்டாச்சாரியார் சொக்கப்பனை கொளுத்தினார்.