கருடன் திரைப்படம் : இரவு காட்சியில் ஹவுஸ் புல்
நெல்லையில் நடிகர் சூரி நடித்த கருடன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளில் கூட்டம் அலைமோதியது.;
Update: 2024-06-02 08:07 GMT
கருடன் திரைப்படம்
நெல்லை மாநகரில் உள்ள திரையரங்குகளில் நடிகர் சூரி நடித்துள்ள கருடன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை விடுமுறை நாள் என்பதால் இன்று (ஜூன் 1) இரவு காட்சி திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்குகளிலும் ரசிகர் கூட்டம் அலைமோதுகின்றது. இதன் காரணமாக நெல்லையில் கருடன் திரைப்படம் திரையிடப்பட்டுள்ள அனைத்து திரையரங்கமும் ஹவுஸ் புல் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த 2024 ஆம் ஆண்டில் முதல்முறையாக இவ்வாறு அனைத்து திரையரங்கில் கூட்டம் அலைமோதுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனால் காமெடி நடிகர் ஆன சூரி நடிகராக கலக்கும் இந்த திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.