கலைஞர் நூற்றாண்டு விழா

தாந்தோனி மலையில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அனைத்துத் துறை சார்பில் 1,699 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.;

Update: 2023-12-16 08:35 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கலைஞர் நூற்றாண்டு விழா- அனைத்துத் துறை சார்பில் 1,699- பயனாளிகளுக்கு ரூ.21.38 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார்.

கரூரை அடுத்த தாந்தோனி மலை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள தனியார் மஹாலில் இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அனைத்துத் துறை சார்பாக 1,699- பயனாளிகளுக்கு ரூ.21.38 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை, சட்டமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா ஆகியோர் முன்னிலையில் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

Advertisement

வருகின்ற 18 ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர்  "மக்களுடன் முதல்வர்" என்ற புதிய திட்டத்தினை துவக்கி வைக்க உள்ளார். பொதுமக்கள் இந்த திட்டத்தின் விபரங்களை நன்கு தெரிந்து கொண்டு, பொதுமக்கள் அவர்களது தெருக்களில் உள்ளவர்களும் மற்றும் அருகாமையில் உள்ளவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி இத்திட்டத்தில் பயன்பெற செய்ய வேண்டும். அனைத்து துறைகளில் வாயிலாக பொதுமக்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அதன் வாயிலாக அவர்களின் தேவைகளை நிறைவேற்றிடும் வகையில் இந்த மாபெரும் திட்டம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அலுவலகம் சென்று வழங்குவதற்கு பதில், பொதுமக்கள் நலன் கருதி,அவர்கள் வார்டு  பகுதிகளிலேயே முகாம் அமைத்து இத்திட்டம் செயல்படுத்தபடும். இத்திட்டமானது, வருகின்ற 18 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 6 வரை இந்த முகாம்கள் நடைபெறும் எனவும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

Tags:    

Similar News