கருப்பூர் காளியம்மன் தேர் திருவிழா

ஓமலூர் அருகே கருப்பூர் காளியம்மன் தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.;

Update: 2024-02-02 02:08 GMT

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள குப்பூர் ஸ்ரீ காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இந்த கோவிலில் வருடா வருடம் வரும் தை மாதத்தில் தேர் திருவிழா நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி கடந்த 29ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தேர் திருவிழா வெகு விமரிசையாக தொடங்கியது. தொடர்ந்து தினமும் காளி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்த நிலையில் 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு பொங்கலிட்டு ஆடு கோழிகளை பலி கொடுத்து காளியம்மனை வணங்கினர்.

Advertisement

இதை தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழாவில் குப்பூர், சிக்கனம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த தேர் திருவிழாவில் ஏதேனும் அசம்பாவிதம் நடக்காமல் இருக்க ஓமலூர் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் குப்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 1000 பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News